புத்ராஜெயா, 18/06/2025 : இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா டியோ, 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத் தீர்வு குழுவின் (JKPS) புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
புதிய உறுப்பினர்கள்:
- டத்தோ’ எம். ராஜசேகரன்
- புவான் கிம்பிலி யாப்-செல்லியா
- என்சிக் முகமட் காபில் அம்பாக் தான்ஸ்ரீ மஹமட் பாதில்
தற்போது JKPS தலைவர் பதவியை வகித்து வரும் டத்தோ’ லோ பெங் சூ மீண்டும் அதே பதவியில் நீடிப்பதோடு, முனைவர் டாக்டர். ஜாடி @சைடி ஹஸ்ஸிம் அவர்களும் உறுப்பினராக தொடர்ந்து செயற்படுவார்கள்.
முந்தைய குழுவில் இருந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார்:
டத்தோ’ ஜி. அமர்ஜித் சிங் கில், பேராசிரியர் டத்தோ’ டா. ஷாமலா சுப்பிரமணியம் மற்றும் புவான் ஷாரன் வீ ஈ லின் ஆகியோரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து அமைச்சர் உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“இந்த புதிய நியமனங்கள், நியாயமான, சுதந்திரமான மற்றும் தொழில்முறை தீர்வுகளுக்கான விளையாட்டு முறைமையை வலுப்படுத்தும் அரசு MADANI உறுதிக்கோளின் பிரதிபலிப்பாகும்,” என அமைச்சர் கூறினார்.
அதேவேளையில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (KBS), அனைத்து விளையாட்டு அமைப்புகளையும் இந்த தீர்வு அமைப்பை முழுமையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.





