என் தமிழ்

மலேசியாவில் ‘இல்லம் தோறும் திருவாசகம்’ தேசிய இயக்கம், திருமிகு தவத்திரு தருமை ஆதினம் அவர்களின் திருக்கரங்களால் தொடங்கப்பட இருக்கிறது.

பட்டர்வொர்த், 04/06/2025 : மலேசியாவின் பினாங்கு பட்டர்வொர்த்தில் அமைந்துள்ள ஸ்ரீ காங்காதர சிவனாலயத்தில், 2025 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி, மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக ‘இல்லம் தோறும் திருவாசகம்’எனும் தேசிய இயக்கம் தொடங்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, தவத்திரு தருமை ஆதினம் அவர்களின் திருக்கரங்களால் தொடங்கப்படுகிறது. நிகழ்வில் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றார். ஸ்ரீ காங்காதர சிவனாலய தேவஸ்தானத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவர்கள் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, திரு பரமசிவம் மருதை அவர்களால் தொகுக்கப்பட்ட, 658 திருவாசகப் பாடல்கள் அடங்கிய ஒரு சிறப்பான இருமொழி நூல் (தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு) வெளியிடப்படுகிறது. இந்த நூல் 500 பக்கங்கள் கொண்டது.

இந்நூலை மக்கள் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், வெறும் RM 15.00 எனும் குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது. (குறைந்தபட்சம் 10 நகல்கள் bulk order செய்யலாம்.)

இந்த நூல்களை உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் வழங்கி, திருவாசகத்தின் ஆனந்தச் சொற்கள் வீடு வீடாகப் பரவ உதவலாம்.

இந்த இயக்கத்தில் நீங்கள் செய்யக்கூடிய பங்கு:
* நூல்கள் வாங்கி பங்கேற்கலாம்
* தமிழர்களிடையே திருவாசகத்தை பரப்ப உதவலாம்
* ஆன்மிக விழிப்புணர்வை வளர்க்கும் பணியில் பங்களிக்கலாம்

தொடர்பு கொள்ள: +6011-3523 1429

Scroll to Top