என் தமிழ்

மஞ்சோங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான இந்திய பாரம்பரிய நடனப் போட்டி – Dance With Starz 1.0 வெற்றிகரமாக நடைபெற்றது

சித்தியாவான், 14/06/2025 : மஞ்சோங் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட “Dance With Starz 1.0” என்ற இந்திய பாரம்பரிய நடனப் போட்டி இன்று சித்தியாவானில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருமண மண்டபத்தில் ஜூன் 13 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த விழா, மாணவர்கள் தங்கள் பாரம்பரிய ஆடல் திறமைகளை மேடையில் வெளிப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. கலாசாரப் பெருமைகளை கொண்டாடும் நோக்கில், மாவட்ட அளவிலான இப்போட்டி தமிழ்ப் பள்ளிகள் மற்றும் சமூகவாழ்வில் கலாசார ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இருந்தது.

போட்டியில் பங்கேற்ற 15 தமிழ்ப்பள்ளிகள்:

விழாவின் சிறப்பு அம்சமாக, மாணவிகள் பாரம்பரிய உடைகளில் வெண்ணகை முகத்துடன் நடனமாடும் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்தன. எனப்படும் சிறந்த நடனக்குழுவிற்கு முதலாம் பரிசும், மற்ற குழுக்களுக்கு இரண்டாம், மூன்றாம் நான்காம், ஐந்தாம் இடப் பரிசுகளும், அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை PPD Manjung பேராசிரியர் மற்றும் முதல்வர் பேரவை, Shining Starz II இணைந்து வழங்கினர். இந்நிகழ்வுக்கு பல அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கின.

இந்த நிகழ்வின் ஊடாக, இளம் தலைமுறையினரின் பாரம்பரிய நுண்கலைகள் மேம்பட வழிவகுக்கப்பட்டுள்ளதோடு, பள்ளி கல்விக்கு அப்பாற்பட்ட திறன்களும் மேடையேறத் தகுதியுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டது.

Scroll to Top