என் தமிழ்

எல்லைப் பிரச்சினையில் தாய்லாந்து, கம்போடியாவின் ராஜதந்திர அணுகுமுறையைப் பிரதமர் பாராட்டுகிறார்

கோலாலம்பூர், 06/06/2025 : பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் நடந்து வரும் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தாய்லாந்து மற்றும் கம்போடியா காட்டிய அர்ப்பணிப்புக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மலேசியா பெரிதும் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ அன்வர் ஒரு முகநூல் பதிவின் மூலம் தெரிவித்தார்.

“இது சம்பந்தமாக, தாய்லாந்து மற்றும் கம்போடியா தொடர்ந்து நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதட்டங்களைத் தணிக்க நடவடிக்கை எடுக்கவும், இந்த சூழ்நிலைக்கு அமைதியான மற்றும் விரிவான தீர்வை நோக்கி பாடுபடவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.”

“ஆசியான் தலைவர் என்ற முறையில், பிராந்திய ஒத்துழைப்பின் உணர்வும், ஆசியானின் அமைதியான தீர்வுக்கான கொள்கைகளும் எந்தவொரு சர்ச்சையையும் கையாள்வதில் உறுதியான அடித்தளமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

Scroll to Top