மலேசியா

‘பொருளாதார நோய்களுக்கு’ தீர்வு காண அதன் கொள்கைகளை அறிந்திருக்க வேண்டும்

கோலாலம்பூர், 08/05/2025 : சுகாதார அமைச்சின் பணியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் நோய்களைப் பற்றி மட்டுமே அறிந்திருக்காமல் நாட்டின் “பொருளாதார நோய்களுக்கு” தீர்வு காண பொருளாதார கொள்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு காண அமைச்சு மற்றும் அது சார்ந்த துறைகள், நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் தெளிவான கொள்கை ஒன்று அடித்தளமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“அதிக ஒதுக்கீடுகள் வேண்டும்தான். ஆனால், பள்ளிகள், புறநகர் உள்கட்டமைப்பு, சிகிச்சையகங்கள் மற்றும் மருத்துவமனைகளைப் பார்க்க வேண்டும். இந்த சவால்கள் அதன் வரம்புகளைப் புரிந்துகொண்ட பிறகு, நியாயமாகவும் சமமாகவும் எதிர்கொள்ள வேண்டும்,” என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

2012ஆம் ஆண்டு தொடங்கி, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள், மலேசியாவின் மொத்த தேசிய ஊதியத்திற்கு 150 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாக பங்களித்துள்ளதாகவும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உயர் திறன் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews