உலகம்சந்தைமலேசியா

மலேசியாவுக்கான பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா குறைக்கலாம்

கோலாலம்பூர், 05/05/2025 : நாட்டின் மீது பரஸ்பர வரிகளை விதிப்பது தொடர்பில், மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதைத் தொடர்ந்து, கூடிய விரைவில், வரி விதிப்பு விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கடந்த மாதம் வாஷிங்டன் டி.சி-இல், MITI அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தொடக்கக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து நேர்மறையான கருத்துகள் கிடைத்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“இவை ஆரம்பகட்ட விவாதங்கள் என்றாலும், அமெரிக்க அரசாங்கம் மலேசியாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்பதையும், விதிக்கப்படும் பரஸ்பர கட்டணங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த செயல்முறை இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எந்த உடன்பாடும் இறுதி செய்யப்படவில்லை என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் விவாதத் திட்டம் தொடர்கிறது,“ என்றார் அவர்.

பேச்சுவார்த்தைகளில் குறிப்பாக நாட்டின் வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரையோடு, தொழில்நுட்பம், நிதி மற்றும் விவசாயத் துறைகள் உள்ளிட்ட இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவதும் உட்படுத்தப்படும்.

இதனிடையே, மக்களின் நலன்களையும் நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் பாதுகாக்க மலேசியா கொள்கை அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், அன்வார் இப்ராஹிம் அதனைக் கூறினார்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews