சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்: 6 உறுப்பினர்கள் நீக்கம்

சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்: 6 உறுப்பினர்கள் நீக்கம்

tan

பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை உடனடி பதவி நீக்கம் செய்தார்.

இதனையடுத்து சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரான டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் தற்போது 4 பாஸ் கட்சி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பதவி வகிக்கின்றனர்.

இதனிடையே இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காலிட், மந்திரி புசார் என்ற முறையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயன்றதற்காக 6 ஆட்சிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவிடம் பேசிவிட்டதாக தெரிவித்தார்.

டான் ஶ்ரீ காலிட்டின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து பி.கெ.ஆர் மற்றும் ஜ.செ.க கட்சிகள், திடீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.