நடன கலைஞர் இயக்கும் படம்

நடன கலைஞர் இயக்கும் படம்

Kalakattam-Tamil-Movie-Posters-2

சென்னை: சினிமா நடன கலைஞர்கள் இயக்குனர் ஆவது எப்போதாவதுதான் நடப்பதுண்டு. நடன கலைஞர்கள் பிரபுதேவா, ராஜூ சுந்தரம், மறைந்த ரகுராம் போன்றவர்கள் படங்கள் இயக்கி உள்ளனர். அதுபோல தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் கே.பாஸ்கர். இவர் தமிழில் இயக்கும்  படத்துக்கு ‘காலகட்டம் என பெயரிட்டிருக்கிறார்.இதுபற்றி அவர் கூறியது: இயக்குனர் ஆகும்எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுவும் நடனத்தை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்ட் இயக்க ஆசை. மீனவர் ஒருவரும் நடன கலைஞரும் இணை பிரியாத நண்பர்கள். இவர்களில் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நட்பு தொடர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நண்பனையும், மனைவியையும் இணைத்து ஒருவன் தவறாக சொல்ல நண்பர்கள் பிரிகிறார்கள். இதன் பிறகு நடப்பது என்ன என்பதே காலகட்டம். பவன்ஸ்ரீ, கோவிந்த் ஹீரோக்கள். சத்யஸ்ரீ ஹீரோயின். ‘நான் கடவுள்‘ ராஜேந்திரன், கானா பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பி.எம்.எழிலரசன் ஒளிப்பதிவு. ஏ.ஆர்.மகேந்திரன் இசை. ஏபிஆர் தயாரிப்பு. சென்னை, கோவளம், தேனி மற்றும் ஆந்திர 
எல்லையில் ஷூட்டிங் நடந்துள்ளது.