எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி

எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி

PX5887436_LIBERIA-_2989219b

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 

இந்த கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட பலர் சிறப்பு வார்டுகளில் வைத்து கவனிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயதான ஸ்பெயின் பாதிரியார் மருத்துவமனையில் இறந்தார். லைபீரியாவில் அரசு சாரா நிறுவனத்திற்காக பணியாற்றியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மிகுவல் பராஜஸ், அங்கிருந்து சிகிச்சைக்காக கடந்த 7-ம் தேதி ஸ்பெயினுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டார். அவருடன் மற்றொரு பணியாளர் ஜுலியானா போகியும் அழைத்து வரப்பட்டார். 

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மேட்ரிட் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் மிகுவல் என்பது குறிப்பிடத்தக்கது.