என் தமிழ்

வளர்ச்சி எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், அதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் – அமீர் ஹம்சா அசிசான்

வாஷிங்டன், 26/04/2025 : பரந்த உலகளாவிய போக்கிற்கு ஏற்ப மலேசியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பு மறுஆய்வு செய்யப்படும் வேளையில், வளர்ச்சி எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் வலியுறுத்தினார்.

மாறாக, அதிகரித்து வரும் உலக நிலையற்ற தன்மையில், வளர்ச்சியடைவதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்வதோடு, நாட்டில் சரியான வழிமுறைகளும் கொள்கைகளும் இருப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தடைகள் இருப்பதோடு, பல்வேறு அமைப்புகள் மலேசியாவின் வளர்ச்சிக்கான இலக்கை மறுஆய்வு செய்தாலும், இவ்வாண்டு மலேசியா தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்யும் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.

இதற்கு முன்னர், 2025-ஆம் ஆண்டுக்கான மலேசிய உள்நாட்டு மொத்த உற்பத்தி, கே.டி.என்.கே வளர்ச்சி விகிதம் 3.9 விழுக்காடாக உலக வங்கி கணித்திருந்தாலும், அதன் வளர்ச்சி விகிதம் 4.7 விழுக்காட்டில் இருந்து 4.1 விழுக்காட்டிற்கு குறையும் என்று அனைத்துலக நிதியம் கணித்துள்ளது.

“தற்போது மற்ற பல்வேறு அமைப்புகளும் உலகளாவிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய வர்த்தகம் குறையும் என்றும் மலேசியாவின் வளர்ச்சி 4.1% ஆகக் குறையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், இது நேர்மறையான வளர்ச்சியாகும். இப்போது நமக்கு முக்கியமானது, எண்களைப் பற்றி அதிகம் நிர்ணயிப்பது அல்ல. மாறாக, மிகவும் நிலையற்ற சூழலை நிர்வகிக்க நமக்கு உண்மையில் உதவும் நிலைகள் மற்றும் கருவிகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதுதான்,” என்றார் அவர்.

உலக வங்கியின் இந்தக் கணிப்பு, அரசாங்கத்தின் இலக்கான 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை என்பதைக் காட்டிலும் குறைவாகும்.

Source : Bernama

#AmirHamzahAzizan
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top