அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட கூட்டங்கள் பரஸ்பர வரிக்கான தீர்வாக அமையலாம் – தெங்கு சஃப்ரூல்
கோலாலம்பூர், 25/04/2025 : அண்மையில், அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி-இல் அதன் வர்த்தகச் செயலாளர்ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான அதன் தூதர் ஜேமிசன் கிரேர் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்புகள், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பரஸ்பர வரி விவகாரத்திற்கான தீர்வாக பார்க்கப்படுவதாக, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது உட்பட வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்தல், தொழில்நுட்ப பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவையும் கலந்துரையாடப்பட்டன.
இரு சந்திப்புகளின் போதும், அமெரிக்கா நீண்ட காலமாக மலேசியாவின் மிக முக்கிய மற்றும் வியூக பொருளாதார பங்காளிகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் அது தொடர்ந்து இருக்கும் என்றும் MITI வலியுறுத்தியது.
பல ஆண்டுகளாக, அமெரிக்க நிறுவனங்கள் மலேசியப் பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதோடு, இரு தரப்பிலும் உள்ள வணிகங்கள் உட்பட தொழிலாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியுள்ளது.
Source : Bernama
#USAImportTax
#USAMalaysia
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews