என் தமிழ்

6,246 மாணவர்கள் எஸ்.பி.எம் எழுதவிலை; வேலைக்குச் செல்வதும் ஒரு காரணம்

புத்ராஜெயா, 24/04/2025 : 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதாத 6,246 மாணவர்களில் 57.8 விழுக்காட்டினர் வேலைக்கு செல்லும் காரணத்தை முன்வைத்துள்ளனர்.

குடும்பப் பொருளாதாரத் தேவை, வாழ்க்கை முறை உட்பட இதர சில காரணங்களால் அவர்கள் வேலைக்கு சென்றதாக டத்தோ அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஆய்வின் படி, குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் 35.5 விழுக்காடும், உடல்நலப் பிரச்சினைகள் 4.7 விழுக்காடும், மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பதற்கு காரணங்களாக அமைந்திருப்பதாக அஸ்மான் குறிப்பிட்டார்.

“கடந்த மூன்று ஆண்டுகளில் பார்த்தால், எஸ்.பி.எம் தேர்வில் கலந்து கொள்ளாதவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்து இருப்பதைக் காண்கிறோம். இது ஒரு நல்ல அறிகுறி, இதை சுழியத்திற்குக் குறைக்க நாங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம்,” என்றார் அவர்.

தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையை 100 விழுக்காடு எட்டுவதை உறுதி செய்ய தமது தரப்பு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அஸ்மான் கூறினார்.

இரவில் வேலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் அனைத்து பாடங்களில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கைக்கு பங்களிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அஸ்மான் கூறினார்.

2023-ஆம் ஆண்டில் 1,467 ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,789-ஆக அதிகரித்துள்ளது.

Source : Bernama

#SPMResults
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top