கனமழையினால் நீர்தேக்க தடுப்பு மீண்டும் உடைந்தது

கனமழையினால் நீர்தேக்க தடுப்பு மீண்டும் உடைந்தது

கோலாலம்பூர், 23/04/2025 : இன்று அதிகாலை பெய்த கனமழையினால், கோலாலம்பூர், செளஜானா உத்தாமாவில் உள்ள தாமான் ஶ்ரீ ஆலமில் நீர்தேக்க குளத்தின் தடுப்பு மீண்டும் உடைந்தது.

இன்று காலை மணி 7.52-க்கு சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஒரு இயந்திரத்துடன் ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லீஸ் முக்தார் கூறினார்.

குளத்தில் இருந்து வெளியேறிய நீர் ஒரு அடி உயரம் வரை அதிகரித்த நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள 35 வீடுகள் பாதிக்கப்பட்டன.

அதன் பின்னர், நீர் வடியத் தொடங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் 29-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நீர்தேக்க தடுப்பு உடைந்ததில், சுமார் 200 வீடுகள் பாதிக்கப்பட்டன.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews