சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது

சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது

சிலாங்கூர், 23/04/2025 : இன்று அதிகாலை இடைவிடாது பெய்த கனமழையைத் தொடர்ந்து, சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவை உட்படுத்தி சுமார் 86 வீடுகள் பாதிக்கப்பட்டன.

எனினும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என்று சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சுங்கை பூலோ, கம்போங் பயா ஜராஸ் ஹிலிர் பகுதியில் உள்ள 80 வீடுகள், மூன்று அடி ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சுங்கை பூலோ, கம்போங் பாருவில் ஆறு வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

வெள்ள நீர் வடியத் தொடங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.

சுபாங் ஜெயா, பெர்சியாரான் டாமாய் கம்போங் கெனாங்கானில் இரண்டு அடி வரை வெள்ளம் ஏற்பட்ட நிலையில், கார் ஒன்று சிக்கிக் கொண்டது.

Source : Bernama

#SelangorFloods
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews