நோயறிதல் தொடர்பான குழு செயல்முறையை அரசாங்கம் உருவாக்கும்

நோயறிதல் தொடர்பான குழு செயல்முறையை அரசாங்கம் உருவாக்கும்

பாங்கி, 18/04/2025 : அமெரிக்கா போன்ற வெளிநாட்டு மாதிரிகளைப் பரிசீலிக்காமல், நாட்டின் சுகாதார அமைப்பின் தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு நோயறிதல் தொடர்பான குழு, டி.ஆர்.ஜி செயல்முறையை அரசாங்கம் உருவாக்கும்.

அந்த செயல்முறையின் அமலாக்கம், கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

“டி.ஆர்.ஜி-யை முழுமையாக்க நீண்ட காலம் தேவைப்படும் என்பதை நான் குறிப்பிட வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் நாம் என்ன கூறினோம் என்றால், குறைந்தபட்சம், ஒப்பீட்டளவில் எளிமையான, குறைவான சிக்கல்கள் உள்ள சில நோய்களுக்கு, டி.ஆர்.ஜி பயன்பாட்டைத் தொடங்குவோம்”, என்று அவர் கூறினார்.

டி.ஆர்.ஜி செயல்முறையில் நோயை வகைப்படுத்தும் நெறிமுறையின் மேம்பாட்டை கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்க வேண்டும்.

மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், சுகாதார பொருளாதார வல்லுநர்கள், பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து அது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் டாக்டர் சுல்கிஃப்ளி தெரிவித்தார்.

இன்று, சிலாங்கூர், பாங்கியில் MyGenom திட்டம் மற்றும் இரத்த மாதிரியை வழங்குவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் அத்தகவல்களைக் கூறினார்.

Source : Bernama

#MyGenom
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews