ஜார்ஜ்டவுன், 18/04/2025 : தேசிய கல்வி முறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் பொருட்டு, 2027-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள 10,000-க்கும் அதிகமான பள்ளிகளில் திறன் பலகையைப் பொருத்துவதற்குக் கல்வி அமைச்சு இலக்குக் கொண்டுள்ளது.
அதேவேளையில், கல்வித் தொழில் நுட்பத்திற்கான சிறந்த மையங்களாக ஆசிரியர் செயல்பாட்டு மையங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவுத் திட்டத்துடன், கல்வி அமைச்சு தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
“2027-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள 10,000-க்கும் அதிகமான பள்ளிகளில் திறன் பலகையைப் பொருத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாண்டிலிருந்து, அதுவே புதிய கல்வி முறையாகவும் இருக்கும். எனவே (திறன் பலகைகளின்) பயன்பாடு அனைத்து மட்டங்களிலும் மேம்படுத்தப்படுவதையும் நாங்கள் காண விரும்புகிறோம்”, என்று அவர் கூறினார்.
இதனிடையே, பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து 396 பள்ளிகளிலும் திறன் பலகை பொருத்துப்பட்டிருக்கும் நிலையில், அதுவே 100 விழுக்காட்டு அடைவுநிலையை எட்டிய முதல் மாநிலமாகத் திகழ்வதை ஃபட்லினா குறிப்பிட்டார்.
Source : Bernama
#EducationDepartment
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews