ஜார்ஜ்டவுன், 18/04/2025 : நாட்டில் கல்வியாளர் செய்யும் எந்தவொரு குற்றத்தையும், குறிப்பாக பாலியல் குற்றங்களில் கல்வி அமைச்சு சமரசம் கொள்ளாது.
அந்த முறைக்கேடுகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும், கல்வி அமைச்சு நிர்ணயித்த செயல்முறையின்படி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
“நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால், எந்தவொரு தவறுக்கும், குறிப்பாக பாலியல் குற்றங்களில் நாங்கள் சமரசம் கொள்ள மாட்டோம் என்பதை நான் உறுதியாக வலியுறுத்துகிறேன். நான் எப்போதும் கூறுவதைப் போல, நீங்கள் தொட்டு விட்டு போகலாம். ஆனால், நாங்கள் முழுமையாக விசாரணை செய்து, வழிகாட்டிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவோம். இந்த உறுதிமொழி மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வப்போது நாங்கள் அதனை தொடர்ந்து உறுதிப்படுத்துவோம்”, என்று அவர் கூறினார்.
இன்று, பினாங்கு பள்ளிகளில் Smartbord வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் ஃபட்லினா சிடேக் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது முழு விசாரணையை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு போலீசாருக்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Source : Bernama
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews