தாப்பா, 17/04/2025 : தேங்காய் பாலின் விலையை வலுப்படுத்த, சபாவிலிருந்து தீபகற்பத்திற்கு தேங்காய்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தொடரும்.
இதுவரை, 10 லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அந்த எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் சாபு கூறினார்.
நோன்புப் பெருநாள் காலக்கட்டத்தில் தேங்காய் பாலின் விலையில் சரிவு ஏற்பட்டாலும், மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சரிவைப் போல இல்லை என்றும் முஹமாட் சாபு தெரிவித்தார்.
இன்று, தாப்பா தோட்டக்காரர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேராக் மாநில தோட்டக்காரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதனைக் கூறினார்.
Source : Bernama
#Sabah
#CoconutPrice
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews