சிப்பாங், 17/04/2025 : மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்த சீனா அதிபர் சீ ஜின்பெங், தமது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மலேசியாவில் இருந்து கம்போடியாவிற்கு புறப்பட்டார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தை வந்தடைந்த சீ ஜின்பெஙை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்று, விமானம் வரை உடன்சென்று வழியனுப்பினார்.
கேப்டன் ஹரித் இஸ்கண்டார் ஜமாலின் ததலைமையிலான அரச ரேஞ்சர் படைப்பிரிவின் முதலாவது பட்டாலியனை சேர்ந்த 28 அதிகாரிகளும் உறுப்பினர்களும்,
சீ ஜின்பெங்க்கு மரியாதை செலுத்தினர்.
புறப்படுவதற்கு முன்னதாக, சீ ஜின்பெங் மூன்று நாள்கள் மலேசியாவில் மேற்கொண்ட பயணத்தை உட்படுத்திய புகைப்படங்களை, அன்வார் இப்ராஹிம் அவரிடம் வழங்கினார்.
அர்ஜுனாசுக்மா கழகத்தின் மலாய், சீனர், மற்றும் இந்திய வாத்தியங்கள் உட்படுத்திய இசைப் படைப்பும் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
இரு நாடுகளின் அரச தந்திர உறவுகள் மேம்பட்டிருப்பதை தொடர்ந்து, கடந்த 12 ஆண்டுகளில் மலேசியாவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
Source : Bernama
#ChinesePreisdentVisitsMalaysia
#ChinaMalaysia
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews