கோலாலம்பூர், 17/04/2025 : சின் சியூ நாளிதழின் முதல் பக்கத்தில் முழுமையில்லாத ஜாலுர் கெமிலாங்கை பிரசுரம் செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, அதன் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் துணை தலைமை செய்தி ஆசிரியர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டனர்.
இன்று, பிற்பகல், புக்கிட் அமான் அரச மலேசிய போலீஸ் படை தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இருவரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில், நாடு முழுவதிலும் இருந்து 13 புகார்களை தமது தரப்பு பெற்றுள்ளதாகவும் ரசாருடின் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, சீன மொழி நாளிதழான அதன் முதல் பக்கத்தில், பிறை நிலவின்றி, முழுமையில்லாத ஜாலுர் கெமிலாங்கை பிரசுரம் செய்யப்பட்டிருந்தது.
இவ்விவகாரம், மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் உட்பட பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்நாளிதழ் தரப்பு, மன்னிப்பு கேட்டு, அது தற்செயலாக ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை என்றும் விளக்கமளித்தது.
Source : Bernama
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews