ஜோகூர் பாரு ,16/04/2025 : கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி உணவு விநியோகம் செய்பவருக்கு மரணத்தை விளைவித்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டை வாகனம் பழுதுப் பார்க்கும் பட்டறை தொழிலாளர் ஒருவர் மறுத்தார்.
இன்று ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூர் ஃபாத்தின் முஹமட் ஃபாரிட் முன்னிலையில் தம்மீதான குற்றஞ்சாட்டு வாசிக்கப்பட்டபோது கொக் ஸி காங் எனும் அந்த ஆடவர் அதனை மறுத்து விசாரணை கோரினார்.
இம்மாதம் 13-ஆம் தேதி, காலை மணி 2.10 அளவில் ஜாலான் ஜோகூர் பாருவிலிருந்து கோத்தா திங்கியை நோக்கிச் செல்லும் 16-ஆவது கிலோமீட்டரில்,
மதுபானம் அருந்தி, BMW ரக காரை ஓட்டிச் சென்று, 37 வயதுடைய முஹமட் தௌஃவிக் அரிஃப் சாரிஃப் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக கொக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 44(1)(b)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்குக் குறையாத, 15 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரிங்கிட்டிற்கும் குறையாத ஒரு லட்சத்திற்கும் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம்.
அதோடு, தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குக் குறையாத காலக்கட்டத்திற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர் வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பொறுவதற்கான தகுதியும் ரத்து செய்யப்படும்.
ஆவணங்களைச் சமர்பிக்க, இவ்வழக்கு மே 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Source : Bernama
#CrimeNews
#Johor
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews