புவிசார் அரசியல் & பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் கலந்துரையாடல்

புவிசார் அரசியல் & பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் கலந்துரையாடல்

சிப்பாங், 17/04/2025 : ஆசியான்-சீனா இடையிலான உறவுகள் உட்பட தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபர் சீ ஜின்பெஙுடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துரையாடினார்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதில், சீ ஜின்பெங் மேற்கொண்ட அலுவல் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஹசான் தெரிவித்தார்.

‘தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் பலதரப்பு உறவுகள், தென் சீனக் கடலின் பாதுகாப்பு, சீனாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிற பகுதிகளுடனான உறவுகள் குறித்து பல்வேறு வழிகள், பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்,” என்றார் அவர்.

நாட்டின் முக்கிய வர்த்தக பங்காளியாக சீனா இருக்கும் நிலையில், மலேசியாவிற்கு அதிக பொருளாதார நன்மைகளை வழங்கும் வகையில் Xi-இன் வருகை கருதப்படுகிறது.

2024-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 48 ஆயிரத்து 412 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இது மலேசியாவின் 2.88 டிரில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் 16.8 விழுக்காட்டை பிரதிநிதிக்கிறது.

இன்று, சீன அதிபரை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், முஹமாட் ஹசான் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source : Bernama

#ChinesePreisdentVisitsMalaysia
#ChinaMalaysia
#PMAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews