பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகள் பெறுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்

பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகள் பெறுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்

சுபாங் ஜெயா,16/04/2025 : கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடவில்லை என்பதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் உறுதி செய்யும்.

பாதிக்கப்பட்ட அனைவருக்குமான உதவிகள் நியாயமாகவும் சமமாகவும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் கிராமத் தலைவர்கள் சமர்ப்பித்த புகார்கள் உள்ளிட்ட பட்டியல்களையும் மாவட்ட அலுவலகங்கள் மறுஆய்வு செய்யும் என்று சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் இயக்க முறைமை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.

“இன்னும் முழுமையான உதவிகள் கிடைக்கவில்லை என்று குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்கள் கிடைத்துள்ளது உண்மைதான். மக்கள் பிரதிநிதிகளும் கிராமத் தலைவர்களும் புகார் அளித்த குடியிருப்பாளர்களின் பட்டியலைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு குறிப்பாக மாவட்ட அலுவலகத்திற்கு மறு ஆய்வுக்காகச் சமர்ப்பித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமமான உதவி கிடைக்கும்,” என்றார் அவர்.

இன்று, கோலா சுங்கை பாருவில் உள்ள சமூக மண்டபத்தில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews