புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை, சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே, கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக நிவாரண மையம் பி.பி.எஸ்-இல், கடந்த வாரம் 3-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை செயல்பட்ட ஜே.பி.ஜே நடமாடும் முகப்பின் முயற்சியின் மூலம் அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ எடி ஃபட்லி ரம்லி கூறினார்.
இலவச மாற்று வாகன ஆவணங்களில், VOC எனப்படும் 114 வாகன உரிமம் சான்றிதழ்கள், 28 வாகனம் ஓட்டுவதற்கான முழு உரிமம், CDL, 17 மோட்டார் வாகன உரிமம் மற்றும் GDL எனப்படும் 4 வர்த்தக வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடங்கும் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், எடி ஃபட்லி தெரிவித்தார்.
வாகனம் ஓட்டுவதற்கான முழு உரிமம், CDL-யைப் புதுப்பிப்பதற்கான 19 விண்ணப்பங்களை ஜேபிஜே பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகன காப்புறுதி தொடர்பாக 58 ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டதாக, அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதுடன், தீ சம்பவத்தில் சேதமடைந்த அல்லது காணாமல் போன வாகன ஆவணங்கள் குறித்து போலீஸ் புகார் வழங்காமலே, இலவசமாக மாற்று ஆவணங்களைப் பெற, ஜேபிஜே-வின் நடமாடும் முகப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக, எடி ஃபட்லி குறிப்பிட்டிருந்தார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews