பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்து பிரதமரை சந்திக்கும் ஙா

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்து பிரதமரை சந்திக்கும் ஙா

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிறந்த உதவிகள் வழங்குவது குறித்து கலந்துரையாட, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவுள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து கலந்துரையாட நான் பிரதமரைச் சந்தித்து பேசுவேன். முடிவுகள் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக அறிவிப்போம்,” என்றார் அவர்.

தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கும், தற்காலிக நிவாரண மையத்திற்கும் தாம் வருகை மேற்கொள்ளாதது குறித்து சில தரப்பினர்கள் பிரச்சனையாக்க முயற்சிப்பதை பொருட்படுத்தக் கூடாது என்று அவர் எடுத்துரைத்தார்.

மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான தீர்வு வழங்குவதையே, தாம் நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும், ஙா விளக்கினார்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews