புத்ரா ஹைட்ஸ்; எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்பு மதம் சார்ந்த தரப்பினர்களை நாடுவீர்

புத்ரா ஹைட்ஸ்; எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்பு மதம் சார்ந்த தரப்பினர்களை நாடுவீர்

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : எந்தவொரு முடிவையும் செய்வதற்கு முன்னர், பேரிடரின் சூழலைப் புரிந்துகொண்டு மதம் தொடர்பான அமலாக்கத் தரப்புடன் கலந்தாலோசிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த வாரம் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தின் போது, அதில் பாதிக்கப்பட்டவர்களும் பணியாற்றியவர்களும், கோவில் ஒன்றில் தொழுகை மேற்கொண்டது குறித்து, பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி ஹசான் அவ்வாறு கருத்துரைத்தார்.

“அறிவுரைகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் இன்றைய சூழலில் அப்படித்தான் இருக்கிறது. நான் அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒரு பேரிடர் சூழலில் இருக்கிறோம். விரைவாக முடிவெடுக்க முடியாது. ஆனால், நாம் மதம் தொடர்பான அமலாக்கத் தரப்புடன் கலந்துரையாடலாம். பேரிடர் சூழ்நிலையின் போது சில சூழல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்,” என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் அதனை கூறினார்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews