ஜாலான் புக்கிட் தங்கா – சிரம்பான், 04/04/2025 : நேற்று மாலை, ஜெலுபு ஜாலான் புக்கிட் தங்கா -சிரம்பானில் கருஞ்சிறுத்தை தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் லாரி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாலை மணி 6.14-க்கு, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 50 வயதான அவ்வாடவரை உட்படுத்திய காணொளி ஒன்றை தமது தரப்பு பெற்றதாக நெகிரி செம்பிலான் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை, PERHILITAN-இன் இயக்குநர் ஃபைசால் இஸாம் பிக்ரி தெரிவித்தார்.
அந்த கருஞ்சிறுத்தை, அவ்வாடவரின் தலையில் தாக்கியப் பின்னர் சாலையின் எதிர்திசையில் உள்ள வனப்பகுதிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்நபர் சிகிச்சைக்காக துவாங்கு ஜஃபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் நெகிரி செம்பிலான் Perhilitan துறை கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அப்பகுதியில் சிறுநீர் கழிக்க இறங்கியபோது அவ்வாடவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக, நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்ஃபைசால் கூறினார்.
அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து கருஞ்சிறுத்தை ஒன்று வெளியே வந்திருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Source : Bernama
#Seremban
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews