புத்ராஜெயா, 04/04/2025 : இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் MEKAR எனப்படும் மக்கள் அன்பை விதைக்கும் திட்டத்தின் வழி அடையாள ஆவணங்களுக்காக ஐந்தாயிரத்து 523 விண்ணப்பங்களைப் பெற்ற தேசிய பதிவுத் துறை ஜே.பி.என் அவற்றை செயல்படுத்தியுள்ளது.
அதே காலக்கட்டத்தில் சபா மற்றும் சரவாக் உட்பட நாடு முழுவதும் 358 MEKAR திட்டத்தைச் செயல்படுத்தியதன் வழி ஜே.பி.என் ஐந்தாயிரத்து 13 ஆலோசனை சேவையையும் வழங்கியிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் பட்ரூல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்தார்.
முன்னதாக, Outreach ஜே.பி.என் திட்டம் என்ற செயல்பட்ட அது, 2019-ஆம் ஆண்டில் MEKAR திட்டமாக பெயர் மாற்றம் கண்டது.
இதுவரை அடையாள ஆவணங்களுக்காக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 441 விண்ணப்பங்களைப் பெற்று செயல்படுத்தியிருக்கும் நிலையில், எட்டாயிரத்து 819 திட்டங்கள் வழி 80 ஆயிரத்து 420 ஆலோசனை சேவையையும் வழங்கியுள்ளது.
“மக்களுக்கு சேவை செய்ய மக்களிடம் செல்கிறோம். தொலைதூரப் பகுதிகள், புறநகர் பகுதிகள், நகர்புறங்களில் கூட. எனவே, அனைவரின் தகவலுக்கும், ஆவணங்கள் காணாமல் போவது வனப்பகுதியிலோ அல்லது தொலைதூரப் பகுதிகளிலோ மட்டும் ஏற்படுவதில்லை. இருப்பினும், நகரங்களிலும் விடுபட்ட மக்கள் உள்ளனர். எனவே, இந்த முயற்சியின் அடிப்படையில், அடையாள ஆவணங்களைப் பெற தவறியவர்களுக்கு உதவ ஜே.பி.என் களத்தில் இறங்கியது”, என்று அவர் கூறினார்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் JPN அலுவலகத்திற்குச் செல்ல இயலாதவர்களுக்கு நேரடி சேவைகளை வழங்க இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
Source : Bernama
#JPN
#MEKAR
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews