வெளிநாட்டு ஓட்டுனர்கள் 25 லட்சம் ரிங்கிட் சம்மன்களைச் செலுத்தியுள்ளனர்

வெளிநாட்டு ஓட்டுனர்கள் 25 லட்சம் ரிங்கிட் சம்மன்களைச் செலுத்தியுள்ளனர்

கோத்தா பாரு, 04/04/2025 : கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, வெளிநாட்டு வாகனங்களின் மீது நடத்தப்பட்ட Ops Tunggak சோதனை நடவடிக்கையின் வழியாக, குறிப்பாக, தாய்லாந்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் 25 லட்சம் ரிங்கிட் சம்மன்களைச் செலுத்தியுள்ளனர்.

பெரும்பாலான சம்மன்கள், தாய்லாந்தின் எல்லையை ஒட்டியுள்ள பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் செலுத்தப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்கு, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு தொழிலாளர்களை ஏற்றி வரும் வேன் ஓட்டுனர்களை உள்ளடக்கி பெரும்பாலான சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே-வின் மூத்த அமலாக்க இயக்குநர் முஹமட் கிப்லி மா ஹசான் கூறினார்.

அண்மையில், தாய்லாந்து பிரஜைகளை ஏற்றி செல்லும் வேன் ஓட்டுனர், நிலுவையில் உள்ள 65,000 ரிங்கிட் மதிப்பிலான அபராதத் தொகையைச் செலுத்தியது, அதிகபட்ச சம்மன்னாக கருதப்படுவதாக அவர் கூறினார்.

சிறப்பு சலுகை வழங்கும் முயற்சியின் மூலம் 150 ரிங்கிட் நிலையான விகிதத்தில், நிலுவையில் உள்ள 3 கோடியே 50 லட்சம் ரிங்கிட் சம்மன்களை ஜேபிஜே வசூலித்துள்ளது.

இதுவரை, சுமார் 20 லட்சம் சம்மன்கள் செலுத்தப்படாமல் இருக்கும் நிலையில், இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அதனை உடனடியாக செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : Bernama

#JPJ
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews