புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 115 வீடுகளைச் சேர்ந்த மக்கள் கட்டம் கட்டமாக இன்று தொடங்கி தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அந்த வீடுகள், குடியிருக்க பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹசுனுல் கைடில் முஹமட் தெரிவித்தார்.
“இன்று, இந்த 115 (வீடுகளைச் சேர்ந்தவர்கள்) தங்களின் வீடுகளுக்கு நுழைவதற்கு நாங்கள் பணியாற்றவிருக்கிறோம். மின்சார விநியோகம் இருக்கிறது. எனினும், வீட்டினுள் அதன் மின்கம்பி எப்படி சேதமடைந்திருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. எனவே, அவர்கள் சுயமாகத்தான் பரிசோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பாக இருந்தால், தங்கள் வீடுகளில் அவர்கள் தொடர்ந்து தங்க முடியும்,” என்றார் அவர்.
மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்பியப் பின்னர் மின்சார விநியோகம் வழங்கப்படும் என்று ஹசுனுல் கைடில் தெரிவித்தார்.
பின்னர், தொழில்நுட்பக் குழு, மின்கம்பி தொடர்பான சேதம் எதுவும் இல்லாததை உறுதி செய்தப் பின்னர், அந்த வீடுகள் பாதுகாப்பான நிலையில் இருந்தால், குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்.
சம்பந்தப்பட்ட குடியிருப்பின் சூழ்நிலையைப் பரிசோதிக்க தொழிநுட்பக் குழு எப்போதும் தயார்நிலையில் இருக்கும்.
மேலும், குடியிருப்பாளர்களை மீண்டும் தங்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயல்முறைகள் இன்று நிறைவடையும் என்றும் ஹசுனுல் கைடில் நம்பிக்கை தெரிவித்தார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews