புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கார் சேவைகள் கிடைத்து வருகின்றன.
நேற்று Chery Malaysia நிறுவனம் 50 கார்களை வழங்கிய வேளையில், கார் விற்பனை நிறுவனமான, கார்ரோவும் 30 கார்களை வழங்கியிருப்பதை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.
”இதுவரை, இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக 30 வாகனங்களை வழங்க CARRO நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, ஆட்சிக்குழு அலுவலகம் தற்போது அதன் பதிவை மேற்கொண்டு வருகிறது. ஆகவே, வாகனம் தேவைப்படும் எந்தவொரு பாதிக்கப்பட்டவரும் அவர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம்,” என்றார் அவர்.
தீச்சம்பவத்தில் 70 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்கள் உட்பட பிற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு நிதியுதவி பெறுவதற்கும் தமது தரப்பு முயற்சித்து வருவதாக அந்தோணி லோக் கூறினார்.
புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மோட்டார் வாகன உரிமம் LKM (எல்.கே.எம்) மற்றும் வாகன உரிமைச் சான்றிதழ்கள் VOC (வி.ஓ.சி) போன்ற ஆவணங்களை இலவசமாகப் பெறுவதை எளிதாக்குவதற்காக சாலைப் போக்குவரத்துத் துறையின் நடமாடும் முகப்பின் செயல்பாட்டையும் லோக் பார்வையிட்டார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews