சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் 2022-ஆம் ஆண்டு முதலே அனுமதி பெற்றுள்ளது

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் 2022-ஆம் ஆண்டு முதலே அனுமதி பெற்றுள்ளது

சுபாங் ஜெயா, 02/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் 2022-ஆம் ஆண்டு முதலே அதிகாரப்பூர்வ ஒப்புதலையும் அனுமதியையும் பெற்றுள்ளன.

அந்த கடை வீடுகள் திட்டம் தற்போது நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ், சிசிசி பெறுவதற்கான கட்டத்தில் உள்ளதாகவும் அதற்கான அனைத்து ஒப்புதல்களும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பெறப்பட்ட்டதாகவும் சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ அமிருல் அஸிசான் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

“கடை வீடுகளின் கட்டுமானம் பெட்ரோனாஸின் ROW-இல் இல்லை என்பதையும் கட்டுமானத்திற்கான திட்ட ஒப்புதல் 2022-ஆம் ஆண்டில் பெறப்பட்டது என்பதையும் நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடை வீடுகளின் கட்டுமானம் அவர்களின் சொந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து ஒப்புதல்களும் 2022-ஆம் ஆண்டு முதலே பெறப்பட்டு விட்டன,” என்றார் அவர்.

இன்று, சம்பவ இடத்திற்கு வருகையளித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

அதோடு, பெட்ரோனாஸ், போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பினரால் விரிவான விசாரணை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமது தரப்பு தற்போது எவ்வித அதிகாரப்பூர்வ கூற்றையும் வெளியிடாது என்றும் அவர் குரிப்பிட்டார்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews