பாதிக்கப்பட்ட பகுதியில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் உள்ளது

பாதிக்கப்பட்ட பகுதியில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் உள்ளது

சுபாங், 02/04/2025 : பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளில் இன்னும் ஏதேனும் சிறிய வகை தீச்சம்பவம் ஏற்பட்டால் அதைக் கண்காணிக்கும் பொருட்டு ஆறு உறுப்பினர்களையும் ஒரு தீயணைப்பு இயந்திரத்தையும் மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை ஜேபிபிஎம் அங்கு தயார் நிலையில் வைத்துள்ளது.

எரிந்த வீடுகளின் கட்டமைப்பில் இன்னும் நெருப்புத் தணல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 24 மணி நேரமும் தீயணைப்புப் படையினர் அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

“ஒரு வேளை நேற்று காலை அது அணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட வீடுகளில் தீக்கணல்கள் இன்னும் இருக்கலாம். அது மீண்டும் தீயை ஏற்படுத்தக்கூடும். எனவே தீ விபத்து ஏற்பட்டு அருகிலுள்ள வீடுகளுக்கு அது பரவுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்றார் அவர்.

பாதுகாப்பு கருதி சில வீட்டிற்குள் நுழைய இன்னும் அனுமதிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் பொறுமை காக்குமாறும் வான் அஸ்லான் கேட்டுக் கொண்டார்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுப்பதற்கு மட்டுமே, பாதிக்கப்படாத மற்றும் பாதுகாப்பான பாதையில் உள்ள வீடுகளுக்கு மட்டுமே படிப்படியாக நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews