மியன்மாரை சென்றடைந்தது ‘ஸ்மார்ட்’

மியன்மாரை சென்றடைந்தது 'ஸ்மார்ட்'

சகாயிங், 31/03/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணியைத் தொடங்கவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் உதவும் பொருட்டும், ‘ஸ்மார்ட்’ எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு சிறப்பு குழு, சகாயிங் மாவட்டத்தைப் பாதுகாப்பாக சென்றடைந்தது.

போலீஸ் படையின் உதவியுடன் சுமார் 24 மணிநேரம் பயணித்து, மாஸ்-01 எனப்படும் அந்த மலேசிய மனிதாபிமான உதவி இயக்கம் அப்பகுதியைச் சென்றடைந்ததாக, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

நிவாரண பணிகளைக் தொடங்கும் வகையில் அப்பகுதியைச் சென்றடைந்ததும் செயல்பாட்டுத் தளம் ஒன்றை அக்குழு அமைத்தது.

உள்ளூர் அவசர நிர்வகிப்பு அதிகாரிகள், லெமாவைப் பிரதிநிதிக்கும் மாவட்ட அதிகாரி யு U மியாவ் ஸ்வர் மௌங் சோவுடன் தளபதி குழுவினர் கூட்டம் ஒன்றையும் நடத்தியதாக, ஸ்மார்டின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச மலேசிய ஆகாயப் படைக்குச் சொந்தமான இரு A400M விமானங்கள் மூலம், ஸ்மார்டின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 50 பேர், நேற்று, மியன்மார்,நய்பிடாவுக்கு புறப்பட்டனர்.

நட்மாவின் கீழ் செயல்படும் குழு ஒன்றுடன், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களும் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், காலை மணி 11.36-க்கு முதல் விமானம் சென்றடைந்த வேளையில், பிற்பகல் மணி இரண்டிற்கு இரண்டாவது விமானம் சென்றடைந்தது.

பின்னர், சுமார் எட்டு மணி நேரம் தரைப் பயணத்தை மேற்கொண்டு சம்பவ இடத்தை அவர்கள் சென்றடைந்தனர்.

Source : Bernama

#NADMA
#SMART
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews