கோலாலம்பூர், 31/03/2025 : இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா சாரித் சோஃபியாவும் கலந்துகொண்டனர்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகளும் இந்த விருந்துபசரிப்பில் கலந்துகொண்டனர்.
300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாகார், மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வெய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜோகூர் மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற உணவு வகைகளான கச்சாங் போல், லக்சா ஜோகூர் மற்றும் மீ ரெபூஸ் ஆகியவற்றுடன் லெமாங், கெதுபாட், ரென்டாங் மற்றும் பிரியாணியும் பரிமாறப்பட்டன.
இங்கிலாந்து, துருக்கி, எகிப்து, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தின் பிரதிநிதிகளும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
ஜோகூர் இராணுவப் படையைச் சேர்ந்த இசைக் குழுவினர், நோன்பு பெருநாள் பாடல்களை இசைத்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப் படுத்தினர்.
Source : Bernama
#Ramadan
#IsatanaNegara
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews