கோலாலம்பூர், 31/03/2025 : அமைதியான மற்றும் நல்லிணக்க சூழலில் மக்கள் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக, கடமையில் ஈடுப்பட்டிருக்கும் போலீஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேசிய போலிஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் நல்வாழ்வையும் உறுதி செய்வதில், குறிப்பாக எல்லைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் போற்றத்தக்கது எனவும் அவர் கூறினார்.
குடும்பத்துடன் பெருநாள் மகிழ்ச்சியில் மக்கள் திளைத்திருக்கும் வேளையில், நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமையில் ஈடுப்பட்டுள்ள போலீஸ் உறுப்பினர்களுக்கு இது எளிதான பணியல்ல அல்ல என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பெருநாள் காலங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸ் உறுப்பினர்களின் குடும்பத்தினரையும் நன்றி பாராட்டிய ரசாருடின், அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் உறுப்பினர்கள் அனைவரும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாகவும் ரசாருடின் ஹுசேன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
Source : Bernama
#Ramadan
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews