கோலாலம்பூர், 30/03/2025 : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியா பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஒற்றுமையின் வெளிப்பாடாக அடுத்த வாரம் அந்நாட்டிற்குச் சென்று மனிதாபிமானப் பணியை வழிநடத்த வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசானுக்கு தாம் அறிவுறுத்தியதாகவும் பிரதமர் கூறினார்.
மியன்மாரில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு மலேசியாவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
இது போன்ற மனிதாபிமான சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஆசியான் உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் கூட்டு நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் அவர் விளக்கினார்.
வட்டார மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில், ஆசியான் நாடுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்வார் அறிவுறுத்தினார்.
மியான்மருக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யவும், ஆசியான் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, மலேசியா நெருக்கமாகப் பணியாற்றும் என்று அவர் விவரித்தார்.
Source : Bernama
#MyanmarEarthquakeAid
#PmAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews