மாரானில் 94-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா

மாரானில் 94-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா

மாரான், 30/03/2025 : பகாங் மாநிலத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆலயமான மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 94-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, அடுத்த மாதம் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.

அதை முன்னிட்டு, முதலாம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாள்களுக்கு நடைபெறவிருக்கும் பங்குனி உத்திர சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வதுடன், தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்துமாறு ஆலயத் தலைவர் ராமன் பழனியப்பன் கேட்டுக் கொண்டார்.

“முதலாம் தேதி கொடியேற்று விழா. அதிலிருந்து பத்து நாட்களுக்குப் பூஜைகள் இரண்டு நேரம் நடைபெறும். சங்காபிஷேகம், மகாபிஷேகம் மற்றும் சாமி புறப்பாடு நடைபெறும். அதன் பிறகு, சிறப்பு பூஜைக்கு வருபவர்களுக்கு எவ்வித சிக்கல்களும் இல்லை”, என்று அவர் கூறினார்.

அதோடு, 10-ஆம் தேதி காலை நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் ஆலையத்தின் உள்வீதியில் வலம் வருவார் என்று அவர் கூறினார்.

இதனிடையே, எவ்வித தடைகளுமின்றி பக்தர்கள் பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

எனினும், பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு முறையாக நேர்த்திக் கடன்களைச் செலுத்துமாறு, பக்தர்களுக்கு ராமன் வலியுறுத்தினார்.

Source : Bernama

#MaranTempleFestival
#Pahang
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews