கோலாலம்பூர், 29/03/2025 : கோலாலம்பூர், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் உரிமம் பெறாத பலூன் வியாபாரி ஒருவர், கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
அவ்விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட டி.பி.கே.எல் அதிகாரிகள் போலீஸ் புகார் செய்துள்ளதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் பாதசாரி நடைபாதையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமம் பெறாத சில வியாபாரிகளின் நடவடிக்கையை அமலாக்கத் தரப்பினர் கண்டறிந்தனர்.
அது பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகவும், நெரிசலை ஏற்படுத்தியதாகவும் டி.பி.கே.எல் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
எந்தவொரு அமலாக்க நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன்னர், தமது தரப்பு நல்முறையில் அங்கிருந்து வெளியேறும்படி கூறியதாகவும், அங்கிருந்த சிலர் வியாபாரிகள் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறினர்.
ஆனால் ஒருவர் மட்டும், இரு முறை கூறியும் அங்கிருந்து நகராமல் தொடர்ந்து வியாபாரம் செய்ததாகவும், மூன்றாவது முறையாக தெரிவிக்கும்போது அவ்வியாபாரி, ஆக்ரோஷமாக நடந்து கொண்டதோடு அதிகாரியையும் தள்ளியதாக டி.பி.கே.எல் கூறியுள்ளது.
அதன் பின்னர், அங்கு சலசலப்பு ஏற்பட்டாலும் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதோடு, யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews