மஞ்சோங், 29/03/2025 : நோன்புப் பெருநாளின்போது, WCE எனும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரி தினசரி போக்குவரத்தைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை இரவு 11.59 மணி வரையில் 50 விழுக்காடு டோல் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை வாகனங்கள் அதிகரிக்கத் தொடங்கியதாக WCE செயல்முறைத் தலைவர், சையிட் முஹமட் நகுயிப் சையிட் முஹமட் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளின்போது, ஹுத்தான் மெலிந்தாங்கில் இருந்து தெற்கு தைப்பிங், சங்காட் ஜெரிங் வரையிலான 102 கிலோமீட்டர் தொலைவில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக முந்தைய பதிவுகள் காட்டுவதாக, மஞ்சோங்கில் உள்ள வடக்கு மண்டல WCE அலுவகலத்தில் பெர்னாமா சந்தித்தபோது, சையிட் முஹமட் நகுயிப் கூறினார்.
“மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மூலம், WCE மற்றும் கே.கே.ஆர் ஆகியவை பராமரிப்பு பணிகளுக்காக பாதை மூடல்களுக்கு தடை விதித்துள்ளன. எனவே WCE நெடுஞ்சாலையில் பராமரிப்பு மற்றும் பாதை மூடல்கள் எதுவும் இருக்காது. டோல் சாவடிகள் அனைத்தும் முழுமையாக திறப்போம். டோல் கட்டணச் சாவடிகள் திறந்திருக்கும். டோல் கட்டணங்களை நிர்வகிக்க 226 டோல் கட்டணச் சாவடி ஊழியர்கள் உதவுவார்கள்”, என்று அவர் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒரு நாளைக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள், WCE நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் என்று தமது தரப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Source : Bernama
#WCE
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews