கிள்ளான், 29/03/2025 : அடுத்த வாரம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் நாட்டில் போதுமான அளவில் உள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
பொருட்கள் கையிருப்பில் பற்றாக்குறை நிலவி வருவதாக புகார்கள் கிடைத்திருந்தாலும், அது பெரிய எண்ணிக்கையில் அல்ல என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
“ஒரு சில பகுதிகளில் அப்பிரச்சனை எழுகிறது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்பட்டிருக்கு பற்றாக்குறை விவகாரத்திற்கு கூட்டரசு விவசாயம் சந்தை வாரியமான ஃபாமா உடனடி தீர்வு காணும். ஆனால் அதிகமான இடங்களில் அப்பிரச்சனை இல்லை. இவ்வாண்டு குறைவான புகார்களே கிடைத்துள்ளன. அனைத்து பொருட்களும் வாடிக்கையாளர்களைச் சென்று சேர்கிறது”, என்று அவர் கூறினார்.
இன்று கிள்ளான், தாமான் ஶ்ரீ அண்டாலாசில் உள்ள சந்தையில் தேசிய அளவில் நடைபெற்ற Semarak Syawal அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு பொருட்களின் விலை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கும், அது குறைந்த அளவில் நிர்ணயிக்க அரசாங்கம் முன்னெடுத்திருந்த அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் முஹமட் சாபு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews