மியன்மார் நிலநடுக்கம்; நட்மா வழி 50 உறுப்பினர்கள் நாளை பயணம்

மியன்மார் நிலநடுக்கம்; நட்மா வழி 50 உறுப்பினர்கள் நாளை பயணம்

கோலாலம்பூர், 29/03/2025 : மத்திய மியன்மார், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிர்வாக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நட்மா மூலம் மலேசியா நாளை மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண குழு HADR-ரைச் சேர்ந்த மொத்தம் 50 உறுப்பினர்களை ​மியன்மாருக்கு அனுப்ப உள்ளது.

மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஒரு சுமார் 50 மீட்புப் பணியாளர்கள் அங்கு பயணமாவதை, வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நட்மாவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில், அங்கு இரு குழுக்களைக் கட்டம் கட்டமாக அனுப்பும் திட்டங்கள் உள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தருணங்களில் அவசரப் பணியில் ஈடுபடுவதற்கு முழுக் குழுவை அனுப்பவதன் வழி அதன் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

இதனிடையே, நட்மாவின் பணிகளுக்கான அனைத்து விசா மற்றும் தளவாடத் தேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, விஸ்மா புத்ரா, யங்கூனில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து போதுமான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Bernama

#Myanmar
#Earthquake
#NadmaMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews