கோத்தா பாரு, 28/03/2025 : ஓரிரு நாட்களில் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, சிலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தொடங்கி இருப்பதால், குவா மூசாங் பகுதியில் உள்ள சில முக்கிய கூட்டரசு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலினால், வாகனங்கள் அதிகமாக காணப்பட்டாலும் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
குவா மூசாங் – கோல லீபிஸ் எல்லையிலிருந்து, சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, குவாங் மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.
கோலாலம்பூரிலிருந்து குவா முசாங் நுழைவாயில் வழியாக மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே, இந்நிலைக்கு காரணம் என்று அவர் கூறினார்.
மேலும், குவா முசாங்-கோலா லிபிஸ் எல்லையின் இரண்டு பாதைகள், ஒரு பாதையாக தொடருவதால், அங்கு எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான பணிகளை அவ்வப்போது போலீசார் மேற்கொண்டு வருவதாக, அவர் கூறினார்.
Source : Bernama
#Ramadan
#TrafficJam
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews