ஷா ஆலம் , 28/03/2025 : கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர் சீருடையில், ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை விவாதப் பொருளாக மாற்ற அவசியமில்லை.
இந்நடவடிக்கை, எதிர்கால சந்ததியினருக்கு, நாட்டை நேசிக்க கற்றுக் கொடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
“கொடி (சின்னம்) இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அணிந்து கொள்ளலாம். பல அண்டை நாடுகள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகின்றன. குழந்தைகள் அந்த நாட்டை மட்டுமே நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அதைப் பற்றி யோசித்து வருகிறோம். இது ஒரு நீண்ட விவாதிக்கும் பொருளாக இருக்க வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். நீண்ட காலமாக இதைப் பின்பற்றி வரும் எனக்குத் தெரிந்த பிற அண்டை நாடுகளைப் பாருங்கள்.,” என்றார் அவர்.
2025-2026 ஆண்டு கல்வித் தவணையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், தலா இரண்டு ஜாலூர் கெமிலாங் சின்னங்கள் வழங்கப்படும் என்று, நேற்று கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
அனைத்து அரசாங்கப் பள்ளிகள், அரசாங்க உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவற்றை உட்படுத்தி இது அமல்படுத்தப்படும்.
Source : Bernama
#PMAnwar
#JalurGemilang
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews