தி.பி.எஸ்-இல் பயணத்தை தொடங்கிய மக்கள்

தி.பி.எஸ்-இல் பயணத்தை தொடங்கிய மக்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து முனையத்தில் இருந்து 187 பொது பேருந்துகள் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு தங்களது பயணத்தைத் தொடங்கின.

காலையில் டிக்கெட்டுகளுக்கான முகப்புகள் திறக்கப்பட்ட நிலையில், தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் செல்வதற்காக பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வரிசையில் நிற்கத் தொடங்கியதைக் காண முடிந்தது.

இன்றும் நாளையும் 21,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி.பி.எஸ்ஸின் நடவடிக்கைப் பிரிவு மூத்த நிர்வாகி ஃபைசல் ரெட்ஸா ரெட்சுவான் தெரிவித்தார்.

இவ்வாண்டு பண்டிகை காலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 140 பேருந்து நிறுவனங்களிடமிருந்து 230,000 டிக்கெட்டுகளை தி.பி.எஸ் ஏற்பாடு செய்தது.

அவற்றில், பல்வேறு இடங்களுக்கான 79 விழுக்காட்டு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

Source : Bernama

#TBS
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews