நோன்புப் பெருநாள்: கே.எல்.ஐ.ஏ-வில் அதிகரிக்கும் பயணிகள்

நோன்புப் பெருநாள்: கே.எல்.ஐ.ஏ-வில் அதிகரிக்கும் பயணிகள்

சிப்பாங் , 28/03/2025 : இன்னும் ஓரிரு நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் இரு முனையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள், நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி சுற்றுலா செல்பவர்கள் என, ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் நிறைந்திருப்பதை காண முடிந்தது.

அப்பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள், நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி சுற்றுலா செல்பவர்கள் என, ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் நிறைந்திருப்பதை காண முடிந்தது.

Syawal-ஐ தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு விமான பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ள நகர மக்களின் மத்தியில் ”balik kampung” உணர்வு மேலோங்கி இருப்பது, இன்று காலை மணி எட்டு தொடங்கி அவ்விரு முனையங்களிலும் பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்துள்ளது.

உள்ளூர் பயணிகளும் அனைத்துலக பயணிகளும் மிகவும் நிதானத்துடன் மற்றும் கட்டுப்பாட்டுடன் தங்கள் பயண செயல்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமூகமாக நடைபெற்று வரும் அனைத்து சேவையும் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் கூறினர்.

உள்நாட்டு விமான பயண டிக்கட்டுகள் அனைத்து விற்று தீர்ந்துள்ளதால், நோன்புப் பெருநாளுக்கு முந்தைய இரு நாட்கள் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Bernama

#KLIA
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews