சுங்கை பீசி , 28/03/2025 : சாலையில் பயணிப்பதற்கு பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்ட 158 விரைவுப் பேருந்துகளுக்குச் சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே தடை விதித்துள்ளது.
மார்ச் 24 முதல் 28-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நோன்புப் பெருநாள் சோதனை நடவடிக்கை, HRA போது, அந்தப் பேருந்துகள் மீது பல்வேறு குற்றப்பதிவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதாக ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
“பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் காரணமாக நாங்கள் பேருந்தை பயணிக்க அனுமதிக்க மாட்டோம். பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பேருந்து நிறுவனம் வாகனங்களைப் பழுதுபார்க்க வேண்டும்,” என்றார் அவர்.
இன்று, சுங்கை பீசி டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட HRA நடவடிக்கைக்குப் பின்னர், ஏடி ஃபட்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
HRA நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில், பல்வேறு குற்றங்களைப் புரிந்த 1,800 விரைவுப் பேருந்துகளையும் தமது தரப்பு கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், HRA நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஐந்து நாள்களில், ஜே.பி.ஜே, 77,736 வாகனங்களை பரிசோதனை செய்ததாக ஏடி ஃபட்லி தெரிவித்தார்.
Source : Bernama
#JPJ
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews