தென் சூடான்: மலேசியர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது

தென் சூடான்: மலேசியர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 28/03/2025 : வணிக விமானங்கள் இன்னும் இயங்கி வரும் நிலையில், தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து தென் சூடானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மலேசியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தென் சூடானில் நிலையற்ற சூழ்நிலை நிலவி வரும் வேளையில், கென்யா, நைரொபியில் உள்ள மலேசிய உயர் ஆணையம், அங்குள்ள பாதுகாப்பு நிலவரங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மலேசிய உயர் ஆணையம் அங்குள்ள மலேசியர்களைத் தொடர்பு கொண்டு வருவதாக, விஸ்மா புத்ராவாகவும் அறியப்படும் வெளியுறவு அமைச்சு கூறியது.

அதோடு, UNPOL எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் போலீஸ் படையில் சேவையாற்றி வரும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-ஐ சேர்ந்த 18 அதிகாரிகள் தொடர்பாக ஐ.நா அமலாக்கத் தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்தது.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதோடு, தென் சூடானிற்கு எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என்று விஸ்மா புத்ரா மலேசிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உதவி தேவைப்படும் மலேசியர்கள் நைரொபியில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Source : Bernama

#WismaPutra
#SouthSudan
#MFA
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews