சாலைகள் சேதம்; கனரக வாகனங்களே முக்கியக் காரணம்

சாலைகள் சேதம்; கனரக வாகனங்களே முக்கியக் காரணம்

சுங்கை பூலோ, 28/03/2025 : அதிக சுமையை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களே சாலைகளின் சேதத்திற்கு முக்கியக் காரணமாவதால், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி வலியுறுத்தினார்.

இதன் நீண்டகால தீர்வுகள் குறித்து கலந்துரையாட போக்குவரத்து அமைச்சு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சிறப்புக் செயற்குழு ஒன்று அமைக்கப்படவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“நமது சாலைகள் சேதமடைவதற்கு கனரக வாகனங்கள் ஒரு முக்கிய காரணம் என்பது உண்மைதான். சுமை வரம்புகள் இருந்தாலும், விதிகளை மீறுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இது மறுக்க முடியாத காரணமாகும்”, என்று அவர் கூறினார்.

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று சுங்கை பூலோ Restoran Jejantas-சில் போக்குவரத்து நிலவரங்களை நேரில் கண்டறிந்த பின்னர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸ்சாண்டர் நந்தா லிங்கி அவ்வாறு கூறினார்.

சுமூகமான பயணத்தை உறுதிசெய்வதற்காக மார்ச் 24 முதல் ஏப்ரல் 7 வரை அவசரமில்லாத நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளையும் நிறுத்தி வைப்பதற்கு தங்கள் தரப்பு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, நோன்பு பெருநாளை முன்னிட்டு இரு தினங்களுக்கு டோல் கட்டணத்தில் 50 விழிக்காடு கழிவை அரசாங்கம் வழங்கி இருக்கும் வேளையில், நெரிசலைக் குறைப்பதற்காக கனரக வாகனங்களின் நடமாட்டத்தையும் குறைத்துள்ளது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews