புக்கிட் மெர்தாஜாம், 27/03/2025 : போதைப்பொருளை உட்கொண்டு கனரக வாகனத்தைச் செலுத்தியது மட்டுமல்லாமல், பேராக், தைப்பிங்கிலிருந்து பினாங்கு, Perai வரை, டயரில் காற்றில்லாமல் இருந்த நிலையிலும் அதில் பயணம் செய்த ஓட்டுநரின் செயல் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றிரவு, வடக்கு நோக்கிச் செல்லும் ஜூரு டோல் சாவடியில், சில நிறுவனங்களுடன் இணைந்து, பினாங்கு, சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே நடத்திய, 2025 நோன்புப் பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையில், 45 வயதுடைய அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சோதனைக்கு நிறுத்தப்பட்ட அந்த கனரக லாரியில் இருந்த ஓட்டுநர் போதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டதை அடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், AADK மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் கஞ்சா வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.
“டயர்களை பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனினும், அதனை அவர் செலுத்தியுள்ளார். அவர் அரை மயக்கத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். உண்மையில், அந்த டயரில் காற்றில்லை. அதனால், அது பிரேக் செயலிழப்பு மற்றும் பலவற்றை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு விபத்தையும் ஏற்படுத்தக்கூடும்”. என்றார் அவர்.
அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம், மலேசிய குடிநுழைவுத் துறை, JIM உட்பட தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம், APAD ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அச்சிறப்பு சோதனை நடவடிக்கை நேற்றிரவு நான்கு மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது.
Source : Bernama
#PDRM
#CrimeNews
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews